எங்கே நிம்மதி உள்ளது

எங்கே நிம்மதி உள்ளது ************--*--*************

ஒரு நாட்டில் ராஜா வாழ்ந்து வந்நதான் அவனிடம் பொன்.,பொருள்,நல்ல வலிமையான போர் படை எல்லாம் இருந்தது ஆனால் அவன் மனதில் நிம்மதி இல்லை. அவன் நிம்மதியை தேடி அழைந்து கொண்டு இருந்தான் பல நாடுகளுக்கு சென்று பல புன்னிய காரியங்கள்,மற்றும் பல கோவில்களில் பரிகாரங்களை செய்கிறான் அப்போதும் அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. பின்பு ஒரு நாள் எவரோ துறவு மேற்கொன்டால் நிம்மதி அடையலாம் என சொன்னதை கேட்டு உடனே ராஜாவும் துறவு மேற்கொள்ள முடிவு எடுத்தான்.அவனிடம் உள்ள எல்லா தங்கம் ,வைர நகையை அனைத்தையும் ஒரு மூட்டையாக கட்டி கொன்டு ஒரு யொகியை போய் சந்திக்கிறார்.

ஒரு மரத்தின் அடியில் ஒரு யோகி தவம் செய்து கொண்டு இருந்தார்.அந்த பொன் மூட்டையை அந்த யோகி முன் வைத்து விட்டு சாமி என்னிடம் உள்ள பொன் பொருள் அனைத்தையும் உங்கள் முன் வைத்துவிட்டேன்.இவை எதுவும் எனக்கு வேண்டாம் எனக்கு நிம்மதி மட்டும் தான் வேண்டும் என்றான். ராஜா சொன்ன எதற்க்கும் பதில் சொல்லாத யோகி கண்ணை திறந்து ராஜா கொண்டு வந்த பொன் மூட்டையை பிறித்து பார்கிறார் கண்ணில் ஒளி வீச தங்க வைர நகைகளை பார்த்த யோகி அந்த மூட்டையை சுருட்டி தன் தலையில் வைத்து கொண்டு வேகமாக எழுந்து ஓடுகிறார். இதை பார்த்த ராஜா ஐயோ போயும் போயும் ஒரு போலி சாமியாரிடம் வந்து விட்டோமே என்று தன் பொன் மூட்டையை மீக்க யோகியை ராஜா துறத்துகிறார். யோகியின் வேகத்திற்க்கு ராஜாவினால் ஈடு கொடுக்க முடியவில்லை அங்கும் இங்கும் வேகமாக ஓடிய யொகி கடைசியாக மீண்டும் அந்த மரத்தின் அடியில் வந்து நிற்கிறார். ராஜா மூச்சி இறைக்க யோகியின் முன் வந்து நின்றான்.

இப்போது யோகி இந்தா உண் பொன் மூட்டையை நீயே வைத்து கொள் என்கிறார்.பொன் மூட்டை மீண்டும் கிடைத்து விட்டது என்பதை நினைத்து ராஜா மகிழ்ச்சியும் ,நிம்மதி அடைந்தான். இப்போது யோகி சொன்னார் நீ என்னை சந்திக்க வரும் போதும் இதே பொன் மூட்டையுடன் தான் வந்தாய் அப்போது உன்னிடத்தில் மகிழ்ச்சியும்,நிம்மதியும் இல்லை. ஆனால்,இப்போதும் அதே பொன் மூட்டையுடன் தான் இருக்கிறாய் ஆனால் இப்போது உன்னிடத்தில் மகிழ்ச்சியும்,நிம்மதியும் உள்ளது.இது தான் வாழ்க்கை என்றார்.நிம்மதி என்பது வெளியே தேடி கிடைப்பதில்லை அது நம் மனதில் தான் உள்ளது என்றார் யோகி. நீதி: அந்த ராஜா வை போல தான் இன்று நாம் அனைவரும் நிம்மதியை தேடி அழைகிறோம்.நிம்மதி நம் மனதில் தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இன்றே அதை உனறுங்கள். ---நன்றி

எழுதியவர் : முகநூல் (13-Mar-16, 12:52 pm)
பார்வை : 212

மேலே