தூரம்

தூரத்தில் இருந்து ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள் அவளை பார்கவே அருவருப்பாக இருந்தது முகத்தை திருப்பி கொண்டு நான் வெளியேறினேன் .
அந்த பெண் அழகாக தான் இருந்தால் என்பதை பிறகு தான் உணர்ந்தேன்.

தூரத்தில் நான் பார்த்தது அவளின் வெளி தோற்றத்தை ஆனால் என் பர்சை நான் வெளியேறிய கடையின் உரிமையாளரிடம் கொடுத்து இதை யாரோ தவற விட்டிருக்கிறார் என்று கொடுத்துவிட்டு போயிருக்கிறாள் ..
சில நிமடங்கள் கழித்து மீண்டும் அதே இடத்திற்கு சென்றேன் ஆனால் அந்த பெண்ணை பார்க்க முடியவில்லை .
இப்படியாக பல தருணங்கள் என்னுள் நிகழ்ந்துள்ளது .தூரத்தில் இருந்தே எதையும் முடிவு செய்வது என்று .

தூரத்தில் ஒரு பெண் வந்துகொண்டிருந்தாள்
அழகாக இருந்தால் ..
அருகே வந்த போதும் அழகாக தான் தெரிந்தாள்...!!! இப்படியாக கி ரா சொல்லுவார் .


தூரம் எதையும் சரியாக காட்டுவதில்லை ..மனமும் தூரத்தை தான் நேசிக்கிறது ..தூரங்கள் துயரங்கள் ...!

எழுதியவர் : அருண்வாலி (13-Mar-16, 4:19 pm)
Tanglish : thooram
பார்வை : 340

மேலே