என் கட்சியில் சேரத் தேவையான தகுதி

அன்புள்ள தமிழ் மக்களே,


நான் கடந்த 10 ஆண்டுகள் வரை தமிழ்த் திரையுலகில் பிரபலமாய் இருந்த முன்னணி நடிகர் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அனைத்திந்திய அளவில் சிறந்த நடிகர் பட்டத்தை இரண்டு முறை பெற்றவன் நான் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நான் தற்போது தமிழரை முன்னேற்றும் பக்திக் கழகம் என்ற புதிய கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளதை செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் வழியாக அறிந்திருப்பீர்கள்.
@@@@@@@@
நான் சிறுவயது முதலே பக்தியிலும் இறை நம்பிக்கையிலும் சிறந்தவன். பல பக்திப் படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்துள்ளது நீங்கள் அறிந்ததே. நான் முருகர் வேடத்தில் நடித்த படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகள் அனைத்திலும் நிஜமான முருகப் பெருமானை நேரில் பார்த்தது போல என் உயிரினும் மேலான ரசிகப் பெருமக்கள் பரவசத்தில் , முருகா, வடிவேலா, கதிர்வேலே என்று எழுந்து நின்று கைகூப்பி வணங்கிய புகைப்படக் காட்சிகளை நாளிதழ்களிலும், அந்த பக்திப் பரவசக் காட்சிகளைத் தொலைக்காட்சி செய்திகளிலும் நீங்கள் அனைவரும் பார்த்ததை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
@@@
என் சொந்த வாழ்க்கையில் அங்கப்பிரதசட்ணம் செய்வது, காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, மண்சோறு தின்பது, கரகாட்டம் போன்ற புனிதமான செயல்களில் ஈடுபட்டவன். அத்தோடு சேலம் கருப்பூருக்கு அருகில் உள்ள எனது திராட்சைத் தோட்டம், மாந்தோப்பு பங்களாக்களில் மாதம் ஒரு யாகம் செய்வது எனது வழக்கம்.
@@@@@@@
எனது கட்சியில் பக்தி உள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
@@@@
என் உயிர் மூச்சான என் கட்சியில் கட்சிப் பதவி பெறவிரும்புவோர். மேலே சொல்லப்பட்ட புனிதச் செயல்களில் எவற்றையெல்லாம் எத்தனை தடவை செய்தார்கள் என்பதைக் கழகத்தின் தலைமை நிலையமான திரையகத்திற்கு தகுந்த புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் வருகிற 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
@@@@@@@@@
அதிகபட்ச புனிதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட மன்றத் தேர்தலில் நமது கட்சிச் சின்னமான வேல் சின்னத்தில் நிற்க தொகுதிகள் ஒதுக்கப்படும்.
@@@@@@@@@
நமது கழகம் பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்பதை நம் தாய்த் திருநாட்டில் இருக்கும் பிரபல ஜோதிடர்கள் அனைவருமே அறிக்கை வெளியிட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
@@@@@@@@@@@@
எனவே ஆர்வமும் பக்தியும் உள்ளவர்கள் விரைவில் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும்படி இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
@@@@@@@@@@@@@
மேலே சொன்ன அனைத்துப் புனிதச் செயல்களிலும் ஈடுபட்டு அவற்றைப் பலமுறை செய்தவர்களுக்கெ அமைச்சர், மற்று வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்படும்.
@@@@@
அன்புடன்
பக்திப் புயல் பூவண்ணராஜன்
தலைவர்
தமிழரை முன்னேற்றும் பக்திக் கழகம் (த.மு.ப.க)
தலைமை நிலையம்
சென்னை - 600 002.

எழுதியவர் : மலர் (13-Mar-16, 9:19 pm)
பார்வை : 155

மேலே