வெண்பாக்கள் --படித்தது

வெண்பா வித்தகம்: ஒற்றிலா வெண்பா
(கருத்தும் அமைப்பும் பாவலர் மா.வரதராசன்:


1. ஈரசைச் சீர்கள், ஓகார வினாக்கள், புணரொற்றுகள்
மடமா மனமே யறி!
(நேரிசை வெண்பா)

உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ களமோ வழியோ? - அளவோ
டுடலி லுயிரென வோடு மரனை
மடமா மனமே யறி!

2. ஈரசைச் சீர்கள், ஒற்றுகளை முழுதும் நீக்கி
காலடி யேகுமே காசு!
(நேரிசை வெண்பா)

ஆலடி யாரண ஆறணி யாடல
நாலடி யாருள நாயக - சூலனே
காலனு தைகொடு காரண னேயுமது
காலடி யேகுமே காசு!

[காசு = குற்றம்]

3. மூவசைச் சீர்கள், ஒற்றுகளை முழுதும் நீக்கி
தாவுபத மேவுவழி தா!
(நேரிசை வெண்பா)

ஓதுமறை நாயகனே ஊனமிலி யேயெனது
வாதுமன வாசலுறு மாயையறு! - தாதுவுரு
மேவுமன மாசகல வேதமுத லேயுனது
தாவுபத மேவுவழி தா!

--ரமணி, 14/03/2016

எழுதியவர் : (15-Mar-16, 6:25 am)
பார்வை : 65

மேலே