சாரல் 6
சாரல் 6
* தேடிக்கொண்டே இருக்கிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கையெனும் நாய்குட்டி
*ஒற்றைப் பார்வையில்
விழுந்தவன் எழவேயில்லை
பணத்தைப் பார்த்த மனிதன்
*சிதறிப்போன சில்லறை
சேர்த்துவைக்குதாம் கல்லறை
-உண்டியலில்லை சாதி
*வராத தந்தியும்
பயத்தைத் தருகிறது
-வதந்தி
*வாழும் வழியை
கயிற்றில் காண்கிறான்
கலைக்கூத்தாடி
-மூர்த்தி