பைத்தியக்காரத்தனம்
பைத்தியக்காரத்தனம்
**************************
பணக்காரருக்கு ஒரு...
ஆண் பிள்ளை...
வயது பதினெட்டு...
பிறந்ததுலருந்து இதுவரைக்கும்
யார்கூடவும் பேசுனதில்ல...!
அதுக்காக அவன்...
ஊமையும்மில்ல...!
வீட்டில் ஏதாவது ஒரு...
ஓரத்தில் ஒதுங்கியே...
கிடப்பான்...
பசிச்சா லேசா கத்துவான்...!
அத புரிஞ்சிக்கிட்டு...!
சோறு வச்சா...!!
எடுத்து தின்பான்...!!!
வீட்டுல இருக்குற எல்லோரும்...
அவனுக்குன்னு ஒருபேர்வச்சி...
அத சொல்லி...
அவன கூப்புடுவாங்க...!
இதுவரைக்கும்...
தன்னோட பேர் இதுதான்னு...
அவனுக்கு தெரியாது... !
சொந்தபந்தம் இருந்தும்...!
அவனுக்குன்னு தனி உலகம்...!
அதுல அவன் மட்டும்ன்னு...!!
தனியா வாழ்றான்...!!!
அக்கம்பத்தில் வாழும்...
தெளிவான மக்கள்...
அவன "பைத்தியம்னு"
சொல்லுறாங்க...!!
இது ஒரு பக்கம்...
இருக்க...
சாலையோரம் ஒருவன்...
பல நாள சுத்தித்திரியிரான்...
குளிக்காத உடம்பு...!
துவைக்காத சட்டை...!!
அடர்த்தியான தாடி...!!!
இது இவனது அடையாளம்...!
பசிக்கோ பசிக்கலையோ...
எல்லோர்கிட்டயும்...
சோறு கேட்பான்...!
இவன் கிட்டபேச...
யாரும் விரும்பமாட்டாங்க...!!
ஆனா இவன்...
எல்லோரும் இருக்குறதா நினைச்சி...
தனியா பேசிட்டே இருப்பான்...!
இவனுக்குன்னு ஒரு...
பேர் வச்சி...
அதச்சொல்லி கூப்பிட...
சொந்தம்பந்தம்ன்னு...
அருகில் யாருமில்ல...!
சுத்தியிருக்குற...
தெளிவான மக்கள்....
இவனையும்...
"பைத்தியன்னு" சொல்லுறாங்க...
தெளிந்த மனிதர்கள் பார்வையில்...
பைத்தியாமகத் தெரியும்...
இவர்கள்...
தனது...
பைத்தியக்காரத்தனத்தை...
தெளிவாகச் செய்கிறார்கள்...!
தெளிந்தவர்கள் தான்...
பல சமயம்...
தனது செயலை...
தெளிவற்று
பைத்தியக்காரத்தனமாக...
செய்து முடிக்கிறார்கள்...!!
இவண்
✒க.முரளி (spark MRL K)