உனை செதுக்கும் உளி

உனக்கான உளியை
பிறன் கையில் தந்தால்
அவன் தனக்கான சிலையாய்
தான் விரும்பி செதுக்கிடுவான்..!

உனக்கான உளியை
உன் கையில் எடுத்துவிடு
உன் உள்ளம் விரும்பும்
சிலையாய் உனை நீயே
வடித்துவிடு..!

அனைத்தும் உண்டு
பெண்ணிலென அவனவன்
செதுக்க உள்ளொன்றும்
புறமொன்றுமாய் உலவித்திரியும்
உன் நிலை பார்த்தனையோ..!

அமைதியை தந்து
ஆற்றலை வாங்கி..
சிறப்புகள் தந்து
சிந்தையை வாங்கி..
சாத்திரந் தந்து
சதையை தின்ன
'ஐயோ' வென் றலறினாய்..!

உனக்கான உளியை
விரும்பியே தந்தாய்
தியாகச் சுடர் ஒளியாய்
வீட்டிற்குள் ஒளிர்ந்தாய்..!

சிற்பியே செதுக்கினும்
சிற்பியின் சொந்தமன்று
சிலை கலையின் சொந்தமாம்..!
உற்றார்க்கும் பெற்றார்க்கும்
உன் புகழை உரித்தாக்கு..!

உளிகொண்டு செதுக்க
கற்சிலை யன்று
உதிரங்கள் சிந்தும்
பெற்சிலை யென்றாய்..!

கல்உளி யன்று
இது உள்ஒளிர் உளியாம்
சிந்தையை தீட்ட
உளி உன் வசமாம்..!

பிறர் செதுக்க
சேதம் நேரும்
புரிதல் கொண்டு
உனைநீயே செதுக்கிவிடு..!

-படத்திற்கான கவிதை

எழுதியவர் : midila (15-Mar-16, 10:12 pm)
Tanglish : unaai sethukkum uli
பார்வை : 1012

மேலே