சுவாசமே நட்பு
உயிரை போல நீ வந்தாயே...
உயிரை எடுத்து தான் சென்றாயே...
விழியில்
விழுந்திட
விழைகின்றேன்
நீ
விரைந்து
எங்கே போனாயோ?
எந்தன்
அழைப்புகள்
என்றும்
உனக்காகவே...
உந்தன்
செவியில்
அது
விழவில்லையா...
எந்தன் ஈர கண்ணில்
உயிரை இணைத்து பார்த்து
நின்று விட்ட உடல்
மார்பில் உயிரை அணைத்து உறைந்தது...
கதகதப்பான பார்வை
திரையை
முத்த மழைகள்
கானல் என்று உரைத்ததோ குமுதமே...
ஒரு துளி பாசமெனும் கோபம்
கண்களில்...
பெருவெள்ளம் நெஞ்சத்தில் அறிவாயோ நீ...
உடல் மேனியை உருக
பார்த்து கதறும் நான்
உள்ளத்தில்
எந்தன் உடலை வெறுப்பதை உணர்வாயோ என் செல்வமே...
எந்தன் உயிரை இழந்து
விட்டேன்
உன்னில் எப்பொழுதோ...
ஆதலால் தான் உடலை பிழிகிறேன்...
என் தேனை பாதுகாக்க
தவறிய தேனீயான நான் ..
எப்பொழுதோ சிறையில் அடைந்தேன்...
வேதனை என்னும் கம்பிகளால்
மனதில்...
உன் இதயத்தில்
என் ஓசை இசைத்து
ஓயாமல் பாடும்
தாலாட்டு
காலத்திற்கும்
நான் இல்லாமல்
என் உயிரே போதும் உன்னில்...
உன் நினைவே போதும்
என்னில்...
(நினைவே போதும்
நீ என்னை நினைத்து
கவலை பட கூடாது
என்று நான் சொல்லும்
உனக்கான ஆறுதல் மொழிகள்...
அதிகமாக தாயிடத்திலும் ...
சகோதரியிடமும்...
தோழிகளிடத்திலும்
கூறுவது...
ஜென்மத்துக்கும் நம்ம உயிர பாக்காம இருக்க முடியாது...
கடைசியா ஒரு தடவையாவது பாத்தா போதும் ..
எனக்காக யோசிக்கறவ...
எனக்காக அழறவ...
என் மேல உண்மையான பாசம் வச்சிருக்கறவ...
அவள கடைசியா ஒரு தடவ பாக்கறதுன்னா
மடியில தலை வச்சு
துயிலலாம்..
அழகூடாது...
சிரிச்சிட்டே இருக்கணும்...
ஏன்னா இப்ப சொர்க்கத்துல இருக்கன்.
அவளையும் அழ விடமாட்டன்...
என்னோட தோழி என்
இறப்புக்கு அழவே கூடாது...
(என் இழப்புக்கு கண்டிப்பா அழணும்னு ஆசபடுவன் ஆனா சொல்லமாட்டன்..)
( நான் உன்னிடத்தில்
எங்கெங்கே நடிக்கிறேன் என்று கூறுகிறேன்...
கோபப்படுவேன் அதித பாசத்தை மறைத்து...
எனக்காக வருத்தப்படக் கூடாது என்று சொல்லுவேன்...
ஆனால்
எனக்காக நீ வருத்தப்பட வேண்டும் என்று நெஞ்சம் ஏங்கும்...
எனக்காக நீ வருத்தப்படமா வேற யாரு வருத்தப்படுவா..
நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாது ...
ஆனா அத வெளிய காண்பிக்க மாட்டன்...
உனக்கு தைரியம் சொல்லணுமில்ல.
எனக்காக உன்ன நீயே கஷ்டபடுத்திக்கும் போது ..
உன் செயல உதாசிண படுத்தறா மாதிரி நடிப்பன்..
ஆனா தனியா உக்காந்து அழுதுகிட்ருப்பன் யாருக்கும் தெரியாம...
உன்ன திட்டுவன் . நீ மத்தவங்ககிட்ட அசிங்கப்படும்போது..
உன் தன்மானத்த விட்டு தரும்போது...
அவ யாரு என் Friend அ திட்ட. அப்டினு
அதுக்கு வழி கொடுத்த உன்ன வாய்ல இருந்து மட்டும் தான் திட்டுவன்.
மனசுலருந்து ஒரு நாளும் இல்ல...
உன்ன உதாசிணபடுத்தறா மாதிரி நான் பேசறனா
...அது எல்லாம் சுத்த பொய்...
உதாரணதுக்கு :
College முடிச்சதுக்கப்றம் நான் எப்பயும் போலவே இருப்பன்...
~ இதலாம் சொல்றனு சொல்லிட்டு இவ ரொம்ப Sensitive அப்டினு நெனைக்காத .
நவரசத்தையும் அள்ள அள்ள அதிகமா கொடுக்கறது நட்பு தான்...
அப்படி நம்ம நட்பில்... உணர்வுகளில்
திரை போட்டு மறைத்து உள்ளே உலவவிட்டவைகளில் சில இவை...
இப்பயும் நான் பொய் சொன்னன் .
நான் Sensitive இல்லனு...
~~ உனக்காக அழுதுருப்பன்..
நீ பாக்க கூடாதுனு மறைத்து அழுவும் போதே கண்டுபிடிச்சிடுவ...
ஏன் அழுவறனு நீ கேப்ப...
நான் உடனே
நான் எங்க அழுதனு
வேற Directionக்கு பேச்ச மாத்துவன் (சில சமயங்களில் உன் தோள்களில் & மடியினில் முகம் புதைத்து...
உனை அரவணைத்துக் கொள்ளும் பொழுதும்
(ஏனெனில் உன்னால் நான் அழுவதை பார்க்க முடியாதல்லவா...
(ஆனால் என் முகத்தை வைத்தே எந்த நிலையில் உள்ளேன் என்பதை உணர்ந்திடுவாய்))
மனசு வலிக்கும் போது வலிக்குதுடினு நான்
Easy ஆ சொல்ற பகிர்ந்திக்கிற என் உயிர் கிட்ட நடிக்கறன்.
இதுலாம்
நடிப்புனு சொல்லிட முடியாது...
ஒருத்தவங்களுக்காக இன்னொருத்தவங்க
துடிக்கிறோம்...
பாசமுள்ளவர்களின் கோபத்தின் அர்த்தம்:
உங்கிட்ட கொழஞ்சி பேசி என்ன சாதிக்கப்போறன்.
நீ என்ன என்னநெனச்சாலும்
பரவாயில்லை...
எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம்...
உன் நல்லதுக்காக நான் திட்றதுல தப்பு இல்லயே...)
தவம் செய்து கண்ட குழலே..
ஊரே உன்னை போற்ற வேண்டும்...
இல்லை
என்
கொடியில்
நான் செல்லாய்
உறைந்து
கணப்பொழுதும் நீ
வளர்வதை காண வேண்டும்