முதல் நட்பே

என் முதல் நட்பே ..
உயிரும் மெய்யும் அறியும் முன்
உணர்வாய் நட்பை அறிந்தோம் ...

உன் பிரிய தோழியாய் நானும் ...
என் இனிய தோழனாய் நீயும்...
ஆயிரம் சண்டைகள் போட்டிருந்தும்
அரைநொடி கூட மௌனம் கொண்டதில்லை ...

அந்திமாலை சோகம்
அதிகாலை தேடும் ..
வகுப்பறை வந்ததும் -உன்
வருகையை நாடும்...

உன் செவி சேர்ந்திடவே
என் கவிகளும் ஏங்கும்...
உன்னிடம் சொன்னால் தான்
என் கண்களும் தூங்கும்...

உன்னிடம் பகிர்ந்தால் தான்
என் சோகமும் தீரும்...
நீ வாழ்த்து சொன்னால் தான்
எந்த விழாவும் சிறக்கும்....

என் பேனாவின் கிறுக்கல்களும்
உன் பெயர் சொல்லும் ...
என் ஏட்டின் பக்கங்களும்
உன் எழுத்தால் நிறையும்...

காரணங்கள் பல கொண்டும் பிரிந்ததில்லை நாமும்...
காரணமற்ற காரணத்திற்காய்
பிரிந்து சென்றாய் ஏனோ...?

மறந்து நீயும் சென்றாயோ ?
மறந்ததாய் நடித்திட துணிந்தாயோ ?
எனக்கு தான் மறந்திட முடியவில்லை
ஏன் அந்த மனம்
இறைவன் படைக்கவில்லை...?

எழுதியவர் : Geetha paraman (15-Mar-16, 10:22 pm)
Tanglish : muthal natpu
பார்வை : 1203

மேலே