உன் வாக்கு யாருக்கு

”உன் வாக்கு யாருக்கு?”
எனைக் கேட்டான் நண்பன் ஒருவன்.

நான் சொன்னேன்:
எந்தத் தலைவர்

”எங்கள் கட்சியில்
உறுப்பினர்களாக இருப்பவர்களில்
குற்றப் பின்னணி உள்ளவர்
மதுப் பிரியராய் இருப்பவர்
மதுக்கடை நடத்துபவர்
ரவுடித்தனம் செய்பவர்
அடியாட்கள் வைத்துள்ளவர்
கொலை செய்து தண்டனை பெற்றவர்
குற்றம் ஏதும் புரிந்து
சிறைச் சாலை சென்றவர்
ஏமாற்றிப் பிழைப்பவர்
கந்து வட்டி மீட்டர் வட்டி
வாங்குபவர்
அடுத்தவர் சொத்தை
அபகரித்தவர்
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்
பெண்களைக் கேலி செய்பவர்
மனித நேயம் இல்லாதவர்
மதவெறி சாதி வெறி உள்ளவர்
குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பவர்
கட்சி மாறி வந்தவர்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
பல கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில்
இருந்து கொண்டு ஆட்சி மாறினாலும்
தொடர்ந்து ஆளுங்கட்சியின் ஆதரவோடு
சம்பாதிப்பவர்கள்
திடீர் கோடீஸ்வரர்கள்
ஒப்பந்தம் எடுத்து
கொள்ளையடித்துப் பணம் சேர்த்தவர்கள்
மணல் கொள்ளை
கல்குவாரிக் கொள்ளை போன்ற
குற்றங்களைப் புரிந்தவர்கள்
தமிழ்ப் பற்று இல்லாதவர்கள்
நம் தாய் மொழியை மதிக்காதவர்கள்
யாருமே இல்லை.

நாங்கள் ஆட்சி அமைத்தால்
எங்கள் கட்சியில் மாமன்ற
உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும்
அரசிடமிருந்து சம்பளம் மற்றும்
இதரப் படிகளைப் பெறமாட்டோம்.
பிற கட்சி உறுப்பினர்கள்
மாமன்ற நடவடிக்கைகளில்
மாமன்றம் நடைபெறும் நாட்களில்
முழுநேரம் அமர்ந்திருக்கும் நாட்களுக்கு மட்டுமே
சம்பளம் வழங்கப்படும்
அரசு வாகனங்களைப் பயன்படுத்தமாட்டோம்.
அவரவர் சொந்த வாகனங்களைத் தான்
பயன்படுத்தவேண்டும்.
நாங்கள் அனைவரும்நேர்மையாக
இருக்கப்போவதால் அரசு அதிகாரிகள்
யாரும் லஞ்சம் வாங்கமாட்டார்கள்
பொது மக்களுக்கும்
அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும்
உரிய மரியாதை கொடுக்கத் தவறமாட்டோம்.

மரியாதைக் குறைவாக நடப்பவர்
முதல்வராக இருந்தாலும்
பதவியை இழக்க நேரிடும்
அமைச்சர்கள் தலைவர்களின்
காலில் விழுந்து அவர்கள் வகிக்கும்
பதவிக்கு இழுக்கைத் தேடித் தரும்
அநாகரிகச் செயலுக்கு
முற்று புள்ளி வைப்போம்”

என்று எந்தத் தலைவர்
துணிச்சலாக அறிவிக்கிறாரோ
அவருடைய கட்சிக்கே எனது
வாக்கும் எங்கள்
கூட்டுக் குடும்பத்தில் உள்ள
பத்துப் பேர் வாக்கும்

எழுதியவர் : மலர் (20-Mar-16, 3:57 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : un vaakku yaruku
பார்வை : 173

மேலே