வாக் கு பந்தல்
வேனிற் காலம்
இனி தேவை
நீர் பந்தல் ....
அரசியல் முகங்களோடு
நிறைய மண் அல்லது பிளாஸ்டிக்
குடுவைகளை
இனி காண முடியும் ......
தண்ணீர் கடன் பட்டு
வாக்களிக்க நேரிடலாம் ....
என்ற அரசியல்வாதிகளின்
தாகம் தீராமல் கூட போகலாம் ...
அனல் பறக்கும் பிரசாரம்
இனி
ஆம்
100 க்கு 104 டிகிரி உண்மை
அரசியலோடு தொடங்கிய வெயில்
அக்கினி நட்சத்திரம்
அரசியல் நட்சத்திரங்களுக்கு
[ஜா]சாதகமாக அமையுமா ?
வேர்த்திருந்து பார்ப்போம் ....
தேர்தல் ஆணையம்
முதலமைச்சரையோ
முதலை அமைச்சரையோ ?
தேர்ந்தெடுக்க முனையும் ..
அடுத்த முதலமைச்சர்
நிறைய இலவசங்களை கைவசம்
வைத்திருக்கிறார் ...
எனவே ,
வெற்றி உறுதி ...?..