ஹைக்கூ சென்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

உயிரற்றவைதான்
பலரை உயிர்ப்பிக்கும்
புத்தகம் !

பிறருக்குப் புரியாது
பெற்றவளுக்குப் புரியும்
மழலை மொழி !

வேட்டு வைத்தது
வெட்டியான் வேலைக்கும்
மின்சாரத் தகனம் !

அதிகமானது
பிற மாநிலத்தில்
தமிழ்ப் பற்று !

வேண்டவே வேண்டாம்
வறட்டு கெளரவம்
கொலைகள் கொடூரம் !

மனிதனை
விலங்காக்கும்
சாதிவெறி !

மனிதனுக்கு அழகு
மனதினில்
மனிதநேயம் !

குறைக்கும்
வாழ்நாளை
கவலை !

உணர்கிறோம்
பிரிவின் போது
மனைவியின் அருமை

இரண்டே வரிகளில்
இணையற்ற இலக்கியம்
திருக்குறள் !

மனிதர்கள் மட்டுமல்ல
பேருந்துகளும் விடுகின்றன
பெருமூச்சு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (21-Mar-16, 7:02 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 104

மேலே