சமூக அவலக்ஹைகூக்கள்

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^

சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Mar-16, 9:12 pm)
பார்வை : 129

மேலே