பெண்ணா ஆணா
மலரை தேடிய
மல்லி வாசனை
மலரை மறுக்க-விதவை
வானழகு பிறை
தன்னை சூட
பொட்டை மறுக்க-விதவை
கருமேகம் திரடி
மையாக சூட
மை மறுத்த-விதவை
பட்டுபூச்சி பட்டாக
பக்குவமாக பருக
பட்டை மறுக்க-விதவை
விலை போன தீக்குச்சி
வித்தியாசமாக விமர்சனம்
செய்ய தேடல்-விலை மாது
கை பிடித்த மனைவி கலட்டிவிட
கரம் கோர்த்து விலை மாதுடன்
கொஞ்சல் சிரிப்போடு-கணவன்
காதல் பிடியில் சிக்கிகொள்ள
சிக்கலோடு கரம் சேர
குடும்ப வெட்டில்-தம்பதி
கல்யாணம் காதல்
ஆண் உறவு பெண் உறவு
சாபமிட்ட வரம்-கடவுள்