செல்லாக் குட்டி வெர்சன்

பெயர்ச்சொல்லி தும்மாவிட்டால்
ஆட்டுக்குட்டியென்பாள் ஆச்சி.
கிலோ மீட்டர் வேகத்திலும் உன் பெயரை
இணைத்துச் சிரித்த நாள் நியாபம் வருகிறதா ?

அப்பேருந்து சன்னலிருக்கையை உனக்குத் தர
நான் சொன்னக் குறும்புக்காரணத்திற்கு
நீ கிள்ளிச் சிவந்த இடம் இன்னும்
வலிக்க வில்லை !!

ரூம்ல வாடிக் கிடக்கும்
ரோஜாவலாம் தூரப் போட்ருவேன் என்று
உச்ச மிரட்டலில் உன்னை அமிழ்த்திச் சிரிப்பாயே ?
என் வீட்டுப் புது ரோஜாவுக்கு கோடி சமம் அது !!

அலைப்பேசி கேட்கவில்லையென
கேட்டுக்கொண்டவைகளில்
நம் முத்தமே அதிகமென்கையில்
த்தூ " மூஞ்சப்பாரு என்றாயே அப்போது நீ நிச்சயமாய்
ஒரு சாரலில் நனைந்திருந்தாய் . கரெக்டா?

ஐ பார் யூ
யூ பார் மீ சேர்ந்தாக்கா ஐ லவ் யூ
என ஸ்டேட்டஸ் வைத்து விட்டேன் :) :)

இப்படியொன்றை அனுப்பி
எப்படியும் கடைசி பாலில்
உன் கோபம் ஜெயித்துவிடுவேன்...

ஆனால் உன் முத்தச் சுமைலிக்கு
நான் சத்தம் போடக்கூடாதென்பாய்
அது தான் இன்னும் புரியவில்லை !!!!!!!!

எழுதியவர் : முருகன்.சுந்தரபாண்டியன் (28-Mar-16, 4:31 pm)
பார்வை : 77

மேலே