திருச்சிற்றம்பலம்
உயிர் நீ உடல் நீ
அருள் நீ பொருள் நீ
விதி நீ மதி நீ
வினை நீ விடை நீ
அடி அகிதலத்தில்
முடி வான் தளத்தில்
முடிவேயின்றி இன்னும் நீள்கிறதே
அகம்பாவமதை அழித்தோமென்றால்
அவன் அடி முடிகள்
நம் அகச்சிறையில்
அகம்பாவமென்ன அழியும் உடலே
எரிந்தால் நீயும் கைப்பிடி சாம்பலே
அதை உணர்த்திடவே
அங்கமெங்கிலுமே
சாம்பல் தரித்த உயர் தத்துவனே
அருள் தரும் தருவே
இருள்தனில் பிறையே
ஞான மழை பொழியும் முகிலே
இறைநிலை அடைய
இரந்தேன் உன்னிடம்
பிறப்பே இல்லா
பேறு அருள்வாய்
கடமை பிணியால்
இடர் நேர்கிறதே
பதம் பற்றுகிறேன்
உடன் தோன்றிடுவாய்...