துயில் கொள்ள ஆசை

கண்ணுக்குப் புலப்படாத வான்வெளியில்
காற்றோடு கலந்துவிட ஆசை;

என் மனதில் கலக்கம் நீங்கிட
எதிரிகளை மன்னித்து விட ஆசை;

இவ்வுலக கவலைதனைத் துறந்து
சொர்க்கலோக வாசல் செல்ல ஆசை;

அடிவானில் அக்கினி சூரியன்
அஸ்தமனம் காண அதிக ஆசை;

தண்மை தரும் நிலவு மடியில்
துயில் கொள்ள ஆசை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-16, 10:26 pm)
Tanglish : thuyil kolla aasai
பார்வை : 319

மேலே