அலைகள்

அழகழகாய்த் தவழ்ந்து வந்து
கரையுடன் கொஞ்சிப் பேசிப்
பின் பையவே போகும் அலைகள் !

சில நேரங்களில்
கடலலைகள் ....ஆர்ப்பரித்துக் கிளம்பி
ஆரவாரமுடன் சீறிப் பாய்ந்து
ஆவேசமுடன் கரையை
முட்டி மோதிப் போகும் !

எண்ண அலைகளும்
அவ்வாறே .... !
தென்றலாய் வருடும் !
சில வேளைகளில் ....
சூறாவளியாய் சுழற்றிச் சுழற்றி
சின்னாபின்னமாக்கும் !

ஆழ்கடல் அமைதியைப் போல்
மனம் சாந்தமுற வேண்டுமாயின்
தியானம் ஒன்றே வழி !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Mar-16, 11:59 pm)
Tanglish : alaigal
பார்வை : 101

மேலே