யாதுமாகி நின்றாள்
யாதுமாகி நின்றாள்
உலகில் உயிர்கள் உருவாக - அவள்
உடலை தந்து நின்றாள்
குழந்தை புவியில் பூக்க - அவள்
கருவை காத்து நின்றாள்
தாய்மை சுகம் கொடுக்க - அவள்
ஓய்வு உறக்கம் துறந்தாள்
தூய்மை யாக்கி சேய்க்கு - அவள்
வாய்மை கற்று தந்தாள்
நோய்மை யுற்ற தருணம் - அவள்
நோம் பிருந்து காத்தாள்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ள - அவள்
ஆற்றல் தந்து நின்றாள்
உடலியக்கம் புரிந்து கொள்ள - அவள்
ஊக்கம் தந்து நடந்தாள்
அகிலம் புரிந்து கொள்ள - அவள்
அறிவின் தொடக்கம் தந்தாள்
குறைகள் அனைத்தும் களைய - அவள்
குல தெய்வமாகி நின்றாள்
தோல்வி கண்ட போது - அவள்
தோள் கொடுத்து நின்றாள்
தவறுகள் செய்த போது - அவள்
தடுத்தும் காத்தும் நின்றாள்
ஆபத்து வந்த போது - அவள்
அருகில் இருத்து காத்தாள்
உயர்ந்த வாழ்க்கை வாழ - அவள்
உழைப்பை தந்து நின்றாள்
உறவின் உன்னதம் காக்க - அவள்
உயிர் துறக்கத் துணிந்தாள்
அன்பை சுமந்து கொண்டு - அவள்
அண்டம் முழுதும் நிறைந்தாள்
எவ்வு யிரிலும் பாதியாகி - அவள்
யாதுமாகி நின்றாள்
தாய்மை பெண்மை போற்றா உலகம்
மாய்ந்து வீழ்ந்துபோகும் வேரில்லா மரமாய்