பொருள் தொலைத்த பெண்மை

அதென்னடா...
பெண்கள் என்றால்
வேறு பார்வை
பெண்ணால் அத்தனை
துயரங்களா...

தென்றல்கள் எல்லாம்
புயல்கள் என்றால்
பிரம்மைச்சாரியாய்
வாழ்ந்திடலாமே...

அடக்குமுறையை
உடைத்துப் பாய்ந்த
உத்தமிகளா புயல்கள்

அடிமைத்தனத்தை
அடித்து நொருக்கிய
அவர்களா புயல்கள்

நெருங்கிப் புதருக்குள்
நெருக்கமாய் இருக்கையில்
புயல்கள் என்ன புதருக்குள்
புதைகின்றனவோ...

தூக்கம் தொலையும்
நடுநிசியில் துணையைத் தேடும்
உம் புலன்களுக்கு
புயல்கள் தான் பொக்கிஷமோ...

சிற்றின்பத்தால் - தன்
சிறு வழியில் உயிரை நிறுத்தி
தனக்குள் புயலின் சீற்றத்தை
பொறுப்பாள் பெண்

விலைமகளாய் விடலை மாற
காசு கொடுக்கும் காமுகனே
காரணமாய்!

விடுதிக்குள் விளையாட்டு
வீட்டுக்குள் மழைப்பாட்டு
தெருவெல்லாம் தேரோட்டம்
காருக்குள் நீரோட்டம்
ஆணின் லீலை எத்தனையோ

பெண்ணை இகழும்
ஆண்கள் வேண்டாம் மண்ணில்!
காமம் கடந்த அன்பை
காண்போம் பெண்ணில்!
***

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (28-Mar-16, 9:25 pm)
பார்வை : 95

மேலே