பாரதிக்கோர் கடிதம்

அப்பனே,

என்னப்பனே,

பாராய்,

பெருமீசைக்காரனே,

 

எங்கும், எட்டப்பனே,

உலகெங்கும் இங்கே,

 

பேசிப் பேசி அரசியல் செய்து,

உள்கூசி கூசாமல் ஊழல் செய்யும்

மூடர்நிறை உலகையோ கண்டாய் உன்கனவாய்,

 

தம்கடமைத் தான்செய்ய,

கையில் கையூட்டுப் பெறுவதையா கண்டாய்உன்கனவாய்,

 

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்,

ஜகத்தினை எரித்திடுவோமென்றாய்.

 

பாலிற்குப் பச்சைக்குழந்தை தானேங்க, அங்கேதன்

பாசத்தலைவனுக்கு பாலபிஷேகம் செய்யும்

இளைஞனையா கண்டாய் உன்கனவாய்,

 

தம்மின சகோதர சகோதரிகளங்கே,

கொத்துக் கொத்தாய்ச் செத்துக் கிடக்க,கவலையன்றி

இங்கே தன் கைபேசியில் காசில்லையென்றுகவலைப்படும்

மாந்தர்களையோ கண்டாய் உன்கனவாய்,

 

மறுபிறவி எடுத்துவிடு அப்பனே,

உன் எழுத்தெனும் சாட்டையே தேவைஇப்பொழுது...

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (28-Mar-16, 7:43 pm)
பார்வை : 104

மேலே