துளிகள்

மரக்கிளையில்
ஊஞ்சல் கட்டி ஆடுகிறாய் !
காற்றிலாடும் உன்
கூந்தல் அழகை ரசிக்கும்
மரமோ பூரிப்பில்
பூக்களை உதிர்க்கிறது .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனித்துளியும்
வரம் கேட்கும்
உன் குழிவிழுந்த
கன்னத்தில்
இளைப்பாற ....!
~~~~~~~~~~~~~~~~~~~~~
மரப்பாச்சியும்
உயிர் பெற்றுவிடும்
உன் பட்டுவிரலால்
நீ அலங்கரிக்கையில் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Mar-16, 12:38 am)
Tanglish : thulikal
பார்வை : 138

மேலே