சில துளிகள்
விண்மீன்கள் துணையோடு
வான் உலா வருகிறான்
நிலாத் தோழன்..
கண் இமைக்காமல்
சுட்டெரிக்கிறான்
ஆதவன்..
உன்னைக் கண்ட நாள்முதலாய்
உலகம் அழகானது
கண்ணாடி கடவுளானது..
சிட்டுக்குருவியின் சத்தம்
சுகமாய்த்தான் ஒலித்தது
சுவர்க் கடிகாரத்தில்...

