உன்னைச்சுற்றி உன் நினைவுகளாக நான் இருப்பேனடி 555

என்னவளே...

உன்னை மட்டும்
நினைத்தேன் என்னில்...

உன்னை மட்டும்
நான் தொடர்கிறேன் நித்தம்...

நான் உனக்கு கொடுத்த
பல கடிதத்தில்...

ஏதேனும் ஒன்றை
ஒருமுறை நீ படித்திருக்கலாம்...

புரியவில்லையா
என் காதல் உனக்கு...

உன் மௌனத்தை ஒருமுறை
கலைத்துவிடு என்னிடம்...

உன் தோழிகளிடம்
என்னை பற்றி பேசவோ...

உன் உறக்கத்தில்
என்னை பற்றி நினைக்கவோ...

ஏதும் சொல்லவில்லையடி
உன்னிடம் நான்...

ஒருமுறை மட்டும் நீ
என்னைப்பற்றி யோசித்துபாரடி...

என் காதல்
உனக்கு புரியும்...

நதியாக நீ ஓடினால் கூட...

இருபக்கமும் உன்னை கரைபோல்
பார்த்துகொள்வேனடி நான்...

உனக்குள் என்மீது
காதல் வரும்வேளை...

உன்னை சுற்றி
நினைவுகளாக நான் இருப்பேனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Mar-16, 9:13 pm)
பார்வை : 607

மேலே