உன் நினைவுகளை அழிப்பேன்
உன் நினைவுகளை அழிப்பேன்
கரையோரம் நின்று
அலைகளின் ஓசையை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
இரைச்சலுடன் அவசரமாக
கடந்து செல்லும்
கூட்ட நெரிசலில்
நடந்துக் கொண்டிருக்கிறேன்
தனிமையான அறையில்
இனிமையான பாடல்களை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
இரவு நேர நிசப்தங்களில்
என் மூச்சு காற்றை
கவனித்துக்கொண்டிருக்கிறேன்
விண்மீன்களை விலக்கி
வேறு உலகை
தேடிக்கொண்டிருக்கிறேன்
நண்பர்களையும்
உறவினர்களையும்
தேடித் தேடி
பேசிக்கொண்டிருக்கிறேன்
காதல் பற்றிய
கவிதைகள் எழுதுவதையும்
நிறுத்திவிட்டேன்
உன்னை பிரித்த நாள் முதல்
உன் நினைவுகள் அழித்துவிட
அனைத்து வழிகளிலும்
முயற்சியும் பயிற்சியும்
செய்துக்கொண்டிருக்கிறேன்
தொடர்ந்து பல வருடங்களாக
இன்னும் தொடரும்