அவள் கொடுத்த வலியை எப்படி மறப்பேன் நான் 555

நண்பா...

என் கரம் பிடித்து
நீ கேட்கிறாய்...

உன்னை தூக்கி எறிந்த அவர்களை
மறந்துவிட்டாயா என்று...

நான் எளிதில் அவளை மறந்துவிடும்
அளவிற்கா என்னை நேசிக்க வைத்தாள்...

அவள் என்னை
அணைத்த அவள் கரங்கள்...

என்னிடம் காதலும் காமமும்
பேசிய அவள் விழிகள்...

அவள் இதழ்களால் ருசித்த
என் இதழ்கள்...

நான் விளையாடிய
அவள் கொடிஇடை...

அவள் முதன்முதல் முத்தம்
பதித்த என் நெற்றி...

அவள் எனக்கு கொடுத்த
காதல் இன்பம்...

என்னை மறந்து சென்ற
அவள் இதயம்...

இன்று நான் அனுபவிக்கும்
வலி எப்படி மறப்பேன் அவளை...

பிள்ளையார் சுழி அவன் போட்டதும்
நான் அழுதுகொண்டே பிறந்தேன்...

படைத்தவன் போட்டது
பிள்ளையார் சுழி அல்ல...

என் வாழ்வே அதுதான் என்று
நிமிடத்திற்கு நிமிடம் உணர்கிறேன் நான்...

கேள்விக்குறியான
என் வாழ்க்கையை நினைத்து...

என் தோழனே அவளை மறப்பது
அவ்வளவு எளிதா.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Mar-16, 4:27 pm)
பார்வை : 1208

மேலே