கலைநயம்
உருமாறும் உணர்விலே
உனையெண்ணி மறதியில்
தவிக்கிறேன் தனிமையில்
துடிக்கிறேன் வெறுமையில்
பனிக்காலம் பொழுதிலே
குளிரோடு மனதினில்
உனதாக்கி கலைநயம்
மயக்கத்தில் களிநடம்
தினந்தோறும் நினைவிலே
கருவோடுக் கருத்துடன்
உளமாகி உயிரெழக்
கனவோடுக் கலைகிறாய்
- செல்வா
பி.கு: புளிமாங்காய் + கருவிளம் வகையில் வஞ்சித்துறை