தப்பிக்கும் வழி

உப்பில்லை புளியில்லை உறைப்பில்லை என்று
==ஒப்புக்குக் குறைசொல்லும் வாயடைக்க வென்று
கப்பென்று ஓட்டுகின்ற பசைபோன்ற அல்வா
==கவனத்தை ஈர்த்தெடுக்கும் வகைக்கிண்டி உண்டால்
துப்புதற்கு முடியாமல் தொண்டைக்குழி தாண்டி
==தொப்பென்று வயிற்ருக்குள் வீழாமல் நிற்க
தப்பின்றி தட்டிலிட்டு வைத்துப்பார் போதும்
==தப்பிக்கலாம் சமையல்தெரி யாதிருக்கும் யாரும் !
*மெய்யன் நடராஜ்