புதிய சகாப்தம்

இலையோடு தென்றல்
மோதிப் புரண்டு
புதிய சரித்திரம் படைக்கிறது
இவனும் அவளுமாய்
இன்னுமொரு சகாப்தத்தின் சந்ததிகளாய்
காடு மேடு குழி
மழை வெயில் வளி
இதன் இழுப்பு தாண்டி நகர்கிறார்கள்
எதிர்காலத்தின் பிரதி நிதிகளாய்..
பிம்பங்கள் பிரமிக்கும்
அழகின் அதிசயங்கள்
அலைமோதும் இவள் கைதனில்,
அடக்கியாளும் அன்பும்
அடங்கிப் போகும் அன்பும்
அதிக கோபம் கண்டிப்பென்னும் சில
வெறப்பு இவன் உள்ளத்துள் கிடக்கைகளாகும்..
பெண்மையின் பொருள் உணர்த்தும்
மழலையாக பிறப்பெடுப்பாள்,
மகளாக மாறுவாள்,
உடன் பிறப்பாய் உருவெடுப்பாள்,
தோழியாய் தோள் கொடுப்பாள்,
மனைவியாய் மடிமீது தாங்கிக் கொள்வாள்,
ஈற்றில் தாயாக அகிலம் முழுதும் தாங்கி, தழைத்து நிற்பாள்.....
ஆண்மையின் பொருளாய் அவன்,
பெண்மையை போற்றிடும் பேருமிவன் காண்பான்,
மகனாக, தோழனாக,கணவனாக,
தந்தையாக பெண்மையை தாங்கி நிற்கும் வேராவான்..
இடர்கள் சூழ்ந்து பரவி
சூரையாடும் சூழ்ச்சிகள் சூன்யமானாலும்
அவள் அவளாகவும்,
அவன் அவனாகவும்
பிரவியின் சரித்திரத்தில்
புதிய வரலாறு எழுதிப் போவார்கள்....
( இன்று மலரும் இளம் மொட்டுக்களுக்கு சமர்ப்பணம் )
முபாறக் பாத்திமா அஸ்க்கியா