காமராஜரின் சரியான துவக்கம்

பதினாறாம் வயதில் --
எதிர்காலக் கனவுகளோடு
நடை போடும் வயதில்
காமராஜர் --
சுதந்திரப் போராட்டம் தேசத்தில் கண்டார்!
தீவிரமாகவும் வளர்ந்திடக் கண்டார்!

காந்திஜி நடத்துவது விடுதலை இயக்கம்! -- இதில்
கலந்து உதவுவதில் இன்னுமா தயக்கம்?
கேட்டது அவரது சேவை மனம்!
வீறு கொண்டு எழுந்தார் காமராஜர்!

சரி! எப்படி துவங்குவது?
சரியாக துவங்க வேண்டாமா?
சிந்தித்தார்! சிந்தித்தார்! முழு இதயத்தோடும்!
சுதந்திர திட்டங்கள் செம்மையாய் நடக்க
மக்களின் நிரந்தர ஆதரவு வேண்டாமா?
முதலில் --
மக்கள் --
புரிந்து கொள்ள வேண்டாமா
சுதந்திரத்தின் தேவையை?
புரிய வைப்பது
தேச பக்தர்களின்
மேடை பேச்சுகள் அன்றோ?

மக்களைத் திரட்டினார்!
சுதந்திர ஆவேச பேச்சுகள் நடக்கும்
மேடைகளை நோக்கி!
அதுதான் காமராஜரின்
விடுதலை இயக்கத்தின் முதல் துவக்கம்!
காந்திஜிக்கு ஆதரவாய்
சரியான துவக்கம்!
எந்த செயலிலும் துவங்கும் முறை கணித்து
வெற்றியே காண்பவர் காமராஜர்!

எழுதியவர் : ம கைலாஸ் (3-Apr-16, 1:02 pm)
பார்வை : 64

மேலே