உன் பின்னாலே வருகிறேன் காத்திரு முடியாது எனக்கு மட்டும் தான் அனுமதி எங்கேயும் எனை அழைத்து கொண்டு செல்வேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா அது உண்மை தான் ஆனால் இங்கு அப்படி நான் செய்தால் நான் ஒரு நல்ல மனைவி அல்லவே நீ என்னை ஏமாற்றுகிறாய் ஏதேதோ சொல்லி சரி உங்கள் வழிக்கு நான் வருகிறேன் என்னோடு நீங்களும் வரலாம் ஆனால் நான் இறந்த பின் தான் நீங்கள் இறக்க வேண்டும் என்னால் உங்கள் இழப்பை பார்க்கவோ ஏற்கவோ முடியாது நான் மேலே காத்துகொண்டிருக்கிறேன் இணைந்து போவோம் இருவரும்

தலைப்பு :
உன் பின்னாலே வருகிறேன் காத்திரு.
முடியாது எனக்கு மட்டும் தான் அனுமதி. எங்கேயும் எனை அழைத்து கொண்டு செல்வேன் என்று சொன்னதெல்லாம்
பொய்யா ?.அது உண்மை தான் .ஆனால் இங்கு அப்படி நான் செய்தால்
நான் ஒரு நல்ல மனைவி அல்லவே.
நீ என்னை ஏமாற்றுகிறாய்
ஏதேதோ சொல்லி.
சரி உங்கள் வழிக்கு நான் வருகிறேன்
என்னோடு நீங்களும் வரலாம். ஆனால் நான் இறந்த பின் தான் நீங்கள் இறக்க வேண்டும்.
என்னால் உங்கள் இழப்பை பார்க்கவோ ஏற்கவோ முடியாது
நான் மேலே காத்துகொண்டிருக்கிறேன் இணைந்து போவோம் இருவரும்...
*****************************************




உன் பின்னாலே வருகிறேன்
காத்திரு...
என்னங்க
எப்பயும்
உங்ககூடவே
இருக்கணும்
அது தான் என் ஆச
உங்க இதயமா...
ஆனா
இறப்பு
எனக்கு
தானே
வந்துருக்கு...
ஆகையால
நீங்க வரும்போது
நான் உங்களுக்காக காத்துகிட்டு இருப்பன்...
இப்ப நீங்க அமைதியாகுங்க..



என் ஆசையும் அதான்டி
அதான்
நான் இறக்கிறேன்னு
சொல்றனே...

உங்க கைய எப்பயும் விடவே மாட்டன்.
ஆனா ஒரு பொண்டாட்டி எப்படி புருஷன இறக்க சொல்லுவா...

ஆனா இந்த சுயநலமான உலகத்ல உங்கள தனியா விட்டு போறனேனு கவலையாயிருக்கு.
நீங்க நான் இல்லாம என்ன பண்ணுவீங்க...
(அடிக்கறதுக்கு அரவணைக்கறதுக்கு
சண்ட போட்றதுக்கு
எல்லாத்துக்கும் நான் உங்களுக்கு தேவ).

சரி என்னோட கடைசி ஆசை உங்களுக்கு தெரியும்ல.என் கைய
பிடிச்சிக்கோங்க.
என்னால உங்க இழப்ப
பாக்க முடியாது.
நான் இறந்ததுக்கு (ஒரு நொடிக்கு அப்புறமாவது) அப்றம் நீங்க வரலாம்.
நான் உங்களுக்காக காத்துகிட்ருக்கன்..

சொர்க்கமோ
நரகமோ
ஒன்னாவே
கை கோர்த்துட்டு போவோம்..

~~~~~~~~~~~~

உன் கையை கொடு..
என்னை பிடி..
உன்னை விடு..
நான் தான் நீ..


மாறிலி
மாறியாக
மாட்டாயல்லவா...
ஒருபொழுதும்
மாறவே மாட்டேன்
என் மாயக்காரா..

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Apr-16, 7:06 am)
பார்வை : 103

மேலே