உறக்கம் தொலைத்தவன்
இது இரவு நேர
திருவிழா...
தனிமை விரும்பிகளின்
தாயகம்...
கலக்கமுடை மனதினருக்கு
மன்றாடும் திருக்கோயில்..
கண்நிறைய உறக்கமிருந்தாலும்
உறங்காமல் வீற்றிருந்து
உளறிக்கொள்ளும் பெருவிழா...
விழித்திறந்தே கனவுகள்
அரங்கேறும்...
விடியலில் சிலருக்கே
ஒளி பிறக்கும்...
இந்நிகழ்ச்சியில் எனக்கும்
வாய்ப்பளித்த
என்னவளுக்கு நன்றி....
வாழ்க்கையில் தோற்று,
மனம் நொந்து,
கண்ணீர் சிந்தி,
உரக்கமிழந்தவர்களில்
நானும் ஒருவன்...
இது உறக்கமில்லா இரவுகளின்
தொடர்கதை......