கூட்டணி

கூட்டணி என்றால்
நிலவும் வானும் போல்
ஒன்றிணையும்
அரசியல்வாதிகள்
பிரிவு என்றதும்
ஈயின் கால்போல்
இணையாமல்
இருந்தாலும் பரவாயில்லை
மானக்கேடான
செயல்களில்
ஈடுபடுகிறார்களே
இவர்களை
நம்பி
நாட்டைக்
கொடுத்தால்
மக்கள் பஞ்சாயத்து
பேசி சமாதானப்
பேச்சுவார்த்தை
நடத்த வேண்டிய
நிலைமை வந்து விடும்
வந்து விடும் அல்ல
வந்து விட்டது!!

மனிதர்கள் என்றநிலை
மாறி மனநிலைத்
தடுமாறியவர்களாக
நடந்து கொள்ளும்
மற்றட்டவர்களாக
நடந்து கொள்ளவும்
தயங்க
மாட்டேன்கிறார்கள்
மிகவும் மட்டமான
மனிதர்கள் !!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (7-Apr-16, 11:03 am)
Tanglish : koottani
பார்வை : 190

மேலே