உறவு

உறவு கடக்கும் பாலமாகும்
ஆற்றைப் போன்ற துன்பங்களை
உறவு தொடரும் பலமாகும்
நம்மில் சேர்க்கும் இன்பங்களை
உறவு இனிய தாளமாகும்
இன்னிசை கூட்டும் வாழ்க்கையிலே
உறவு நமக்கு அடித்தளமாகும்
மனோதிடம் கொடுக்கும் வருத்தத்திலே

உறவு நமக்கு வரமே
சிறப்பாய் அமைந்தால் வளமே
உறவு வலிக்கு மருந்தே
பசியைப் போக்கும் விருந்தே
உறவு இணங்கி இருந்தால்
வாழும் நாட்கள் சொர்க்கம்
உறவு பிணங்கி வெறுத்தால்
வாழ்க்கை முழுதும் நரகம்

உறவில் எல்லாம் சேரும்
வீடும் நாடும் சேரும்
ஊரும் மொழியும் சேரும்
மரமும் மலையும் சேரும்
நல்ல நட்பும் சேரும்
முகநூல் சொந்தமும் சேரும்
உறவென எல்லாம் ஆக‌
கவிதைகள் நாளும் ஊறும்..

கிளியும் மயிலும் சேரும்
மேகமும் நிலவும் சேரும்
வயலும் காடும் சேரும்
நதியும் குளமும் சேரும்
அனைத்தையும் உறவாய் எண்ணி
உள்ளம் மகிழ்ந்தே வாழ
வாழ்நாள் ஒளிர்ந்தே மின்னும்
தினம் நூறுவருமே பண்ணும்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Apr-16, 12:50 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : uravu
பார்வை : 3489

மேலே