என் வரிகளில் - காதல் ஆசை யாரை விட்டதோ - அஞ்சான்

உன் நினைவின்அலைகள் மனதில் ஓயுமோ
உன் சுவாசக்கணைகள் தேடிவந்து இதயம் பாயுமோ
மனதை மயக்கும் பேசும் கிள்ளையே
உனை மணத்தில் வெல்ல முயன்று தோற்கும் வாசமுல்லையே
ஆசைகள் தேறுமோ , சுவாசத்தை சேருமோ
உன் மூச்சுப்பட்டால் போதை ஏறுமோ ??

ஓர் கவிஞனின் கற்பனை போலவே
உனை கவிதையின் கருவென காண்கிறேன்
என் கவிதையின் இனிமையை நீ கூட்டு
என் காதலே ...

அன்பே ..
உன் எதிர்வர மலர்களும் நாணுதே
உனை தம்மின தலைவியாய் காணுதே
உன் பொலிவினில் நிலவுக்கு ஒளி கூட்டு
என் தேவதையே ....

உன் நினைவின்அலைகள் மனதில் ஓயுமோ
உன் சுவாசக்கணைகள் தேடிவந்து இதயம் பாயுமோ

கோடையினில் ரசிக்கின்ற ஓடைக்குளிர் நீதானே
நிழல் பெற ஒதுங்கினேன் , உயிரையே ஒதுக்கினாய்
வாசமலர் கைக்கொண்டு நேசத்துடன் நிற்கின்றாய்
மணத்தினை கலைக்கிறேன் மனதினை தொலைக்கிறேன்
காலம் தாண்டி நிற்பேன் காதலின் காரணம்
கொஞ்சுமுந்தன் நினைவுகளே காதலின் பூரணம்
காதலின் பூரணம்
செய் சுவாசத்தாலே காதல் தோரணம் ...

ஓர் கவிஞனின் கற்பனை போலவே
உனை கவிதையின் கருவென காண்கிறேன்
என் கவிதையின் இனிமையை நீ கூட்டு
என் காதலே ...

நினைவுக்கில்லை விதிமுறை ,நினைவுகளுக்கென் வரைமுறை
மனதினை நிறைக்கின்றாய் நினைத்ததும் ஒவ்வொருமுறை
நிறைகளென நிறைகின்றாய் குறைகளென்று எதை கூற
உறியென முறையிடுகிறேன் நொடியில் உயிரையே உறிகிறாய்
தென்றல் என்னை கடந்தால் சுவாசத்தின் நியாபகம்
என்னை தீண்டுவதில்லையே ஏன் இந்த பாதகம்
ஏன் இந்த பாதகம் ..

நின் நினைவில் மரிக்க என்றும் சம்மதம் .....


ஓர் கவிஞனின் கற்பனை போலவே
உனை கவிதையின் கருவென காண்கிறேன்
என் கவிதையின் இனிமையை நீ கூட்டு
என் காதலே ...

அன்பே ..
உன் எதிர்வர மலர்களும் நாணுதே
உனை தம்மின தலைவியாய் காணுதே
உன் பொலிவினில் நிலவுக்கு ஒளி கூட்டு
என் தேவதையே ....

எழுதியவர் : ஆசை அஜீத் (9-Apr-16, 5:37 pm)
பார்வை : 296

மேலே