இதயம் செத்து புனிதம் இழந்த உலகமானது

குறிப்பு :- ( கருப்பு கருப்பு என்னும் பாடல் மெட்டில் எழுதப்பட்ட வரிகள் )

வறுமை வறுமை வறுமை கொடுமை கொடுமை கொடுமை
விடிந்த பின்னும் இருட்டு போல வெளிச்சம் இல்லையே

மனிதம் மனிதம் மனிதம் இழந்து மனிதன் வாழும் வாழ்க்கை இன்று
இதயம் செத்து புனிதம் இழந்த உலகமானது

வாரி வாரி தந்த பூமி வாடகைக்கு தஞ்சம் போகி
hybrid என்னும் பெயரில் உணவில் நஞ்சை கண்டது

உண்ணும் உணவோடும் உந்தன் உடையோடும்
மோகத்தை இங்கு யார் சேர்த்தது
அதனாலே உடல் வெள்ளை நோய அழுக்காக இன்று கறையானது

நாம் நம் முன்னோர்கள் ஒரு நோயை கண்டதில்லை
ஏன் இன்று காய்ச்சலுக்கே உடலும் ஊசிக்கு விலைபோனது

உடலோடு சதைக்கூடி வாயிற்றோடு காற்றும் ஏன் சேர்ந்தது
முழு மாத கர்பிணியாய் வாழ்நாள் சாபம் நாகரிகம் தந்து

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (11-Apr-16, 9:44 am)
பார்வை : 92

மேலே