இயற்கை காதலன்

( குறிப்பு :- மூங்கில் காடுகளே என்னும் பாடல் மெட்டில்எழுதப்பட்ட வரிகள் )

பூந்தென்றல் வருடல்களே
தேன் கறக்கும் வண்டினமே
சூரிய குளிர்காயும் முகில் பகையின் ஓவியமே

இயற்கையோடு என்னுயிர் கரைந்து
வானவெளியில் மேகத்தில் புதைந்து
வீசும் இந்த காற்றிலே கலந்து
மேலும் மேலே மிதந்திட
மழையில் கருத்து வெயிலில் வெளுத்து

உப்புத் தண்ணீரில் பூக்கும் பூவின் தேன் சுவையில்
நீரும் உவகிறது பூவின் தேகம் இனிக்கிறது

மனிதன் மரத்தை அறுத்தாலும்
மரம் தான் கருணை இழப்பதில்லை
அறுத்த மனிதன் மேல் நிழலை வாரி தருகிறது

மயிலாய் நானும் மாறேனோ இன்ப நடனம் ஆடி நனைவேனோ
வெண்ணிலவாய் நானும் மாறேனோ ஒளி சாரல் சிந்தி வாழ்வேனோ
வெண்மதியை காதல் செய்யும் விண்மீனாய் வானில் பூப்பேனோ

சூரிய செங்கதிறாள் மலர்கள் கருத்து சிவந்தாலும்
சூரிய விடியல் தான் செடியை துளிர்க்க செய்கிறது
சுற்றி களைத்தாலும் பூமி மயக்கம் கொள்வதில்லை
சுழலும் ஆசையிலே மனிதன் மயக்கம் ஓயவில்லை

ஆதவனாய் நானும் மாறேனோ விடியல் தந்து வாழ்வேனோ
நதியாய் நானும் மாறேனோ களைக்காமல் லட்சியம் காண்வேனோ
நொடியில் கவரும் மின்னல் ஒளியாய் நானும் உலகில் பிறப்பேனோ

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (12-Apr-16, 7:55 am)
Tanglish : iyarkai kaadhalan
பார்வை : 773

மேலே