சிக்கு, சிக்குக் கண்ணா

சிக்கு, சிக்குக் கண்ணா எங்கடா போயிட்ட?
@@@@
யாரைம்மா சிக்குக் கண்ணா –ன்னு கூப்பிடறீங்க. ஒண்டறக் கண்ணு, மாறு கண்ணு, சாரக் கண்ணுன்னு* தான் கொங்கு நாட்டுப் பகுதிலே கேள்விப்பட்டிருக்கறேன். சிக்குக் கண்ணுன்னா என்னம்மா?
@@@@
எம் பையம் பேரு சிக்கு. அவனத்தான் சிக்குக் கண்ணான்னு செல்லமாக் கூப்பிடறேன்.
@@@
என்ன பேருமா அது? அதுக்கு என்னம்மா அர்த்தம்?
@@@
அது இந்திப் பேருங்க. ஒரு தொலைக் காட்சி பற் பசை வெளம்பரத்திலே ஒரு பையன ‘சிக்கு, சிக்கு’ன்னு கூப்பிடுவாங்க. அது இந்திப் பேராம். அந்தப் பேரு எனக்கும் என்னோட வீட்டுக்காரருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனால அந்தப் பேர எங்க பையனுக்கு வச்சுட்டோம். அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாதுங்க. எனக்கு தெரிஞ்ச பல பேரு அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தாம் வைக்கறாங்க. நாங்க மட்டும் எப்பிடிங்க எங்க பையனுக்குத் தமிழ்ப் பேர வைக்க முடியும்?
@@@
சரிம்மா. அவன் உங்க பையன். அவனுக்கு உங்களுக்குப் பிடிச்ச பேர வைக்கறது உங்க விருப்பம். நாஞ் சொல்லறதுக்கு வேறொண்ணும் இல்லீங்க.
@@@################################################################################################################################

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
* Squint eye
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Chikku =; Fruit, Sweet चिक्कू = பழம், இனிப்பு (சப்போட்டா)
=========================================================

எழுதியவர் : மலர் (12-Apr-16, 10:24 pm)
பார்வை : 175

சிறந்த நகைச்சுவைகள்

மேலே