பாடினாள் ஆராரோ

பாடினாள் ஆராரோ
தன செல்வத்துக்கு

கண்ணே கண்மணியே
என்ற மகிழ்வோடு

கட்டிக் கரும்பே செல்லமே
என்ற அனுசரணையோடு

கற்கண்டே புள்ளி மானே
என்ற அ டை மொழிகளோடு

அக்கணமே இட்டுக் கட்டி
பாடினாள் மெட்டோடு

எந்தக் கவித்திறனும் இல்லை
எந்த அப்பியாசமும் இல்லை

பாடினாள் குரலெடுத்து
ஆனந்த இராகமாக


சுற்றுபுறம் தெரியவில்லை
யார் யார் அருகில் என்று
அறியவில்லை.

பாடினாள் பண்ணோடு
நெக்குருக நெஞ்சுருக

கடமை குறுக்கிடவில்லை
கட்டாயம் அமிழ்த்தவில்லை


பாடினாள் இனிமையாக
தன் குழந்தை உறங்குவதற்கு


கண்ணயர்ந்தது செல்வம்
தாயின் கரங்களிலே
மட்டில்லா ஆதுரத்துடன்

பாடினாள் அவள்
மெய்மறந்து தாலாட்டு
மென்மையாக மிருதுவாக.
அதி அற்புதமாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (13-Apr-16, 4:04 pm)
பார்வை : 743

மேலே