சரிந்தேன் உன் மடியில்

கடும் வெயில் காயாத மரத்தடி
சுடும் வேளை சோர்ந்த நேரமடி
திடும் என்றே இருவர் வந்தனர்
எடும் அந்த அரிவாள் என்றனர்

கொடும் அரக்கர் அவர் கண்டு என்
குலை நடுங்கியது தொலைந்தேன்
கூட்டத்தில் மறைந்த என்னை
குறிப்பாய் அவர் கண்டு விட்டார்

உன்னைத்தான் தேடினேன் என்றே
ஓங்கினார் கை வீசினார் – அன்பே
உதிர்ந்தேன் நான் நொடியில்
சரிந்தேன் உன் மடியில் !
..

>
..

கீழே பார்க்க ...

>

>

வாக்கு மூலம்
நுங்கின் ஓலம்
–ஓலையிடம்

எழுதியவர் : முரளிதரன் (14-Apr-16, 8:54 am)
பார்வை : 79

மேலே