காதலும் ஒரு மழைத்துளி தான்
என் காதலை உன்னிடம் சொல்லும் வரை
என் காதலும் ஒரு மழைத்துளி தான்
கடலில்..!
கடல் கடந்த உன்னைக் கரம் பிடிக்க
எண்ணி மனம் திறந்தேன்
மடலில்..!
பள்ளிப் பருவத்தில் பட்டாம்பூச்சி போல்
சுற்றித் திரிந்தோம்
திடலில்..!
கல்லூரியில் கண்ணெதிரே நீயிருந்தும் மதிமுகத்தைப்
படமாகப் பதித்தேன்
உடலில்..!