சித்திரை திங்கள்

எங்க வீட்ல என்னை கண்டிப்பா கோயிலுக்கு போகனும்னு சொன்ன ஒரு நாள் தமிழ் வருடபிறப்பு தான். எல்லா வருசமும் சித்திரை 1 குலதெய்வம் கோயிலுக்கு போய் பாயாசம் போட்டு வழிபடுறது தான் எங்களோட வழக்கம். இப்பவும் அப்படிதான் அனால் நான் சின்ன பையனா இருக்கும் போது, இதே நாள் பாயாசமும் போட்டு கோவிலையே சோறு பொங்கி சாப்பிடுவோம். இப்போ சோறு பொங்குறது கிடையாது. அதுவும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். என்ன தான் இதெல்லாம் இருந்தாலும் இப்போ என்னால கோயிலுக்கு கூட போக முடியல (வெளியூர் ல இருக்குறதுனால).

இந்த நன்னாளில் நடக்க கூடிய ஒன்று: இந்த உலகத்துல கடவுள் இருக்காரா, இல்லையானு ஒரு மிக பெரிய விவாதம் போய்க்கிட்டு இருந்தாலும், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி நிச்சியம் இருக்குனு நம்புற ஒருவன் நான். அதுக்கு எடுத்துகாட்டாதான், இந்த நிகழ்வை இங்க சமர்ப்பிக்கிறேன். நான் சின்ன வயசுல இருக்குறப சொன்ன ஒரு விசையம் என்னன்னா இந்த சித்திரை முதல் நாள் கண்டிப்பா மழை பெய்யும். இதுவரைக்கும் நான் பாத்ததுல இந்த நாள்ல தூறல் கூட விழுந்திருக்கு ஆனால் எதுவுமே இல்லாம இருந்ததில்ல.

இதே மாதிரித்தான், வடக்குத்தி அம்மன் கோவிலுக்கு பங்குனி மாசம் (கடைசி ஞாயிறு) பாயாசம் போடும் போது நடக்கும்னு சொல்லுவாங்க. இப்போ ஒரு நாலு வருசமா வடக்குத்தி அம்மன் கோவில பாயாசம் போடும் போது நின்றுக்கேன், இந்த வருஷம் வரைக்கும் மழையும் பேஞ்சிருக்கு. இந்த நவீன உலகத்துல இதெல்லாம் பாக்கும் போது ரொம்ப அதிசயம். எதுக்குனா உங்களுக்கே தெரியும், இன்னைக்கு மழை வரும்னு செய்தி ல சொல்லுவாங்க அனால் அதுக்கான அறிகுறி கூட இருக்காது.

இது தான் நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததுக்கான சான்றுகள். இப்போ இருக்குற நம்ம தலைமுறைல அதுக்கான சாத்தியகூறுகள் மிகவும் அரிது. ஆனால், அதுதான் முடியல நாளும். இப்போ இருக்குற கொஞ்ச இயற்கை சுழலை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச முயற்சிகளை பண்ணுவோம். அது முடியலனா, குறைந்தபட்சம் இந்த இயற்க்கைய அழிக்காமல் இருப்போம்.

அனைத்து இம்மனுலக ஜீவராசிகளுக்கும் இனிய தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துகள்.

எழுதியவர் : (14-Apr-16, 10:11 am)
சேர்த்தது : அரவிந்தன்
Tanglish : sithirai thingal
பார்வை : 149

மேலே