ஏதாவது சொன்னியா
என்னைத் தெரியுதா....?
நான் உன்னோட பேத்தி
வந்திருக்கிறே...ன்!
நான் உன் முன்னால நிக்கிறனே...
என்னைத் தெரியுதா!
என் கைகளில் ‘பார்பி’ பொம்மை
இருக்கிறது! பார்த்தியா...!
நான் கூப்பிடுறது கேக்குதா..?
கேக்குதா கேக்கலையா...?
.......... (பதிலில்லை)
என்ன சொன்னே
ஏதாவது சொன்னியா...?
காது கேளாத பாட்டி!