ஆசைப்பட்டேன் உன் மீது

ஆசைப்பட்டேன் உன் மீது
கோபப்பட்டாய் என் மீது
உன்னைக் கவர நான்
பல சேட்டைகள் செய்தேன்

ஒரு நாள் வந்தாய்
உன் காதலை சொன்னாய்
அன்றோ என் மனதில் பல
பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன

நாட்கள் நகர்ந்தது
காதல் திருமணத்தில் முடிந்தது
குழந்தைகள் பிறந்தன
நன்கு படித்தன

வேலை நிமித்தமாக
வெளிநாடு சென்றனர்
திரும்பி வருவார்கள்
என்று எண்ணி

காலம் கடந்தது
கால்கள் தளர்ந்தது
இன்று
உனக்கு ஒரு ஊன்றுகோலாய் நான்..!
எனக்கு ஒரு ஊன்றுகோலாய் நீ..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (15-Apr-16, 7:59 am)
பார்வை : 149

மேலே