பேச நினைத்த

பேச நினைத்த
பேசி முடியாத
பேச்சுக்கள்
மிச்சம் இருந்துகொண்டே
இருக்கின்றன.

அவ்வப்போது
பேசலாமா ? கூடாதா ?
அப்புறம் பேசலாமே?
என்ற பேச்சுக்களும்’
இன்னும் இருக்கின்றன.

ரகசியம் என்று நினைத்த
ரகசியம் அல்லாத
பேச்சுக்களும்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.

நம்மைப் பற்றி
நாம் பேசுவதைக்காட்டிலும்
பிறர் பேச்சில்தான்
நம் பிம்பம்
கட்டமைக்கப் படுகிறது.

நாம்
நாம் சொல்கிற
நாமும் இல்லை,
பிறர் சொல்கிற
நாமும் இல்லை.

எழுதியவர் : கனவுதாசன் (16-Apr-16, 2:50 pm)
Tanglish : PESA ninaitha
பார்வை : 231

மேலே