ஊடுவியல்
நடுவாக இருந்தாய்
அறத்தின் நமைச்சலில்
உன்னைத் தொடர்ந்தோம்.
மணிமுள் போல் உன்
சாய்வு தொடங்கியது.
உன் நகர்வின் மென்மை
அறியத் தவறினோம்.
அவர்களின் சிறிய தவறுகள்
அளவைக் கூட்டினாய்.
இவர்களின் பெரிய தவறுகள்
சுருக்கினாய்.
நாங்கள் சாய்ந்தது
அறியாமல் நடந்தது.
நீ சாய்ந்தது
சீ ..ச்சீ..