காதல்

ஒருவர் மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல் .
அந்த அன்பினால் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கை தான் காதல்
எந்த உறவாகினும் காதல் கொள்ளும்
காதலுக்கு அளவுகோல் இல்லை
காதலுக்கு எல்லை இல்லை
அதேபோல் காதலுக்கு பரிமாணமும் இல்லை
பருவ வயதானாலும் பட்சிளங்குழந்தையாய் சீராட்டும் பெற்றோர்களின் அன்பும் காதல் தான்
உடன்பிறப்புகள் நடத்தும் அடிதடி சண்டையும் காதல் தான்
நண்பனின் பாதை தவறு என அதட்டி கூறுவதும்
துன்பத்தில் திளைக்கும் போது தோள் கொடுத்து ஆறுதல் தருவதும் காதல் தான்
அன்புடையவர்களின் எண்ணங்களை பகிர்தலும் அவர்களின் உணர்வுகளை புரிதலும் காதல் தான்
எனக்கு விருப்பமான ஒருவர் என்னுடன் இல்லாவிடினும் மகிழ்வுடன் வாழட்டும் -
என எண்ணுவதும் காதல் தான்
இமை போல் காப்பேன் என்ற உணர்வுடன் அதிரடியாய் அரவணைக்கும் அன்பும் காதல் தான்
என்றேனும் என் அன்பை புரிந்துகொள்வார்கள் என காத்திருப்பதும் காதல் தான்
நம்முடன் இருப்பவர்களின் விருப்பங்களுக்காக விட்டுகொடுப்பதும் காதல் தான்
காதல் கொள்ளும் மனம் வேறாகினும்
காதல் கொள்ளும் வயது வேறாகினும்
காதலின் வெளிப்பாடு வேறாகினும்
அதை உணரும் வழி ஒன்று தான் காதல்
காதலோடு காணும் கண்களுக்கு மட்டுமே காதலை உணர முடியும்.

எழுதியவர் : (16-Apr-16, 7:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 181

மேலே