இணையத்தில் தமிழ்-இதயத்தில் தமிழ்

இதயத்தில் வாழும் தமிழ், அது என்றும் நின்று வாழும்.
அழியுமென்று சொன்னாலும் இணையத்தில் என்றும் வாழும்.
தலைமுறைகள் அழிந்தா போகும் தமிழ் அழிந்துபோக.?
அந்த இரத்த பந்தத்திலே தொலைந்தா போகும் தமிழ்.?

தலைமுறை இடைவெளி ஆயுதமாக வந்து தடுத்தாலும்
முடிவுரை என்பது எம் தமிழுக்கில்லை.
ஒரு முறை, சில முறை, பலமுறை தவிர்த்தாலும்
அதன் வளர்ச்சியை எவரும் தடுத்திட வாய்ப்பில்லை

இதயத் தளங்களின் அணுவில் நின்றிடும் தமிழ்.
இணையத் தளங்களின் இணைப்பில் பரவிடும் தமிழ்.
அள்ளக் குறையாத ஆயிரம் சிறப்பை கொண்டது தமிழ்.
இதயமாயினும், இணையமாயினும் இறவாமல் வாழும் தமிழ்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (18-Apr-16, 9:29 am)
பார்வை : 1885

மேலே