யாரைடா ராமநாதா துருப்பிடிச்ச ஆச்சி, துருப்பிடிச்ச ஆச்சின்னு சொல்லறாங்க

டே ராமநாதா, இங்க வாடா.
@@
கூப்பிட்டீங்களா ஆச்சி?
@@
உங்கிட்ட ஒண்ணு கேக்கணும். டிவிலே அடிக்கடி துருப்பிடிச்ச ஆச்சி, துருப்பிடிச்ச ஆச்சின்னு சொல்லறாங்க. எந்த ஆச்சியைத் துருப்பிடிச்ச ஆச்சின்னு சொல்லறாங்க?
@@@
ஆச்சி யாரும் எந்த ஆச்சியையும் துருப்பிடிச்ச ஆட்சின்னு சொல்லல. ஆச்சிங்க எல்லாம் தங்கமானவங்கன்னு எல்லார்க்கும் தெரியும். ஒவ்வொரு ஆச்சி காதும் பத்து பவுன் கடுக்கண் பாரத்திலே தொங்கிட்டு இருக்குதே
@@@@
போடா உனக்கு வெளையாட்டா போச்சு. நாங் கேட்டதுக்கு பதில் சொல்லுடா ராமநாதா.
@@@#
ஆச்சி நம்ம ஆச்சிங்க யாரையும்
துருப்பிடிச்ச ஆச்சின்னு சொல்லமுடியுமா? ஒரு எதிர் கட்சிக்காரங்க தான் ஆளுங்கட்சியோட ஆட்சியைத் துருப்பிடிச்ச ஆட்சி -ன்னு சொல்லறாங்க.
@@@
ஓ....ஆட்சியா? செய்தி படிக்கறவங்க ஆட்சி ஆட்சின்னு சொன்னது ஆச்சி ஆச்சின்னு எங் காதுலே கேட்டுச்சு.

எழுதியவர் : மலர் (19-Apr-16, 8:17 pm)
பார்வை : 90

சிறந்த நகைச்சுவைகள்

மேலே