தினம் ஒரு பாட்டு - 82 தத்துவம் 4

மனிதா ! நீ மனிதனாய் வாழு !
மரணம்வரை நீ புனிதனாய் வாழு !
தனியாத தாகத்தில் தவிக்கும் உன் மனது
இறுதிவரை உன்னேக்கம் ஓய்வு கொள்ளாது!

ஆண்டவனும் மனிதன்தான்
அவன் மனிதனுக்கும் மனிதனாம்
அவன் படைப்பின் சிறு துளிதான்
அகிலமென்னும் பேரண்டம்தான் !

மனிதன் செய்யும் ஜித்துகளை
மிருகம் செய்வதில்லை;
மனிதனின் காழ்ப்புணர்ச்சிகள்
மிருகத்திடம் இல்லை;

நாட்டை ஆளும் அரசனே
நீ வேட்டையாட ஏழையா ?
ஓட்டுப்போட்ட பாமரனுக்கு
ஒட்டுக் கோவணமே மிச்சமாம் !


ஏழை வீட்டு அடுப்பினில்
தூங்குகிறது பூனைகள்
எஜமான் வீட்டு அலமாரியை
அலங்கரிக்குது யானைகள்

மாற்றம் வேண்டும் என்றுதான்
மாற்றி மாற்றிப் பார்க்கிறோம்
மாற்றம் என்னவோ வந்தது
மது கடைகளின் இனப் பெருக்கம் !

மலிவு விலை மதுவென்று
மார்த்தட்டிக் கொண்டார்கள்
இன்றதன் விலையைக் கேட்டாலே
குலை நடுங்க வைக்கிறது !


இலவசம் என்றதுமே பரவசமாகின்றோம் - அதற்காக
மதுபானக் கடைகளில் பணம்வாரி இறைக்கின்றோம்!
பரிதாபப் படுவதுப்போல் பாசாங்கு புரிவோர்க்கு
அனுதாப வாக்குகளை அள்ளி அளிக்கின்றோம் !

ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்
நன்றி மறந்தவர்கள் நாட்டில் உள்ளவரை
வென்று சிறப்பது வெகு கடின பணியாகும்!

எழுதியவர் : சாய்மாறன் (20-Apr-16, 10:55 pm)
பார்வை : 106

மேலே